தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவிட்-19 வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் வீட்டு மின் இணைப்புகளுக்கு, 2020ஆம் ஆண்டு மார்ச் மாத பட்டியலுக்கு 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மீட்டர் ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதக் கட்டணத்தையே கட்டலாம் -மின்சார வாரியம் அறிவிப்பு - தாழ்வழுத்த மின் வாரியம் புதிய அறிவிப்பு
சென்னை: தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் கடந்த மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
![கடந்த மாதக் கட்டணத்தையே கட்டலாம் -மின்சார வாரியம் அறிவிப்பு eb bil](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6502781-thumbnail-3x2-ty.jpg)
எனவே முந்தைய மாத பட்டியல் (ஜனவரி,பிப்ரவரி) மார்ச் மாத கணக்கீட்டாக எடுத்து பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் தொடர்ந்து வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும். ஏற்கனவே பயனீட்டாளர்களுக்கு இணையதள வழி மூலம் வலைதள வங்கியியல் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மொபைல் வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் ஆகிய வழிகள் மூலம் பணம் செலுத்திட மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
TAGGED:
சென்னை மாவட்ட செய்திகள்