- கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத சிறப்பு ஊதியத்தை புதுப்பித்து தரவேண்டும்.
- இந்திய மருத்துவக் குழு ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி -2 என்ற அரசாணையின் மூலம் பணியிட மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைப்பதைக் கைவிடவேண்டும்.
- கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்குப் பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.