கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவசியம் இன்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஊரடங்கு மீறல்: 130 நாட்களில் 19 கோடி அபராதம் வசூல்! - curfew violation fine tamilnadu
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியதாக 130 நாட்களில் அபராதமாக 19 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரத்து 078 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
Tamilnadu case list
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 130 நாட்களில் தடையை மீறியதாக, 9 லட்சத்து 24 ஆயிரத்து 933 பேரை காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. 6 லட்சத்து 60 ஆயிரத்து 011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக 19 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரத்து 078 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:அபராதம் விதிக்கும் காவல்துறை: கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள்