தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கோடி ரூபாயைத் தாண்டிய அபராதத் தொகை!

சென்னை: ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களிடமிருந்து இதுவரை அபராதமாக சுமார் ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

tamilnadu fine
tamilnadu fine

By

Published : Apr 18, 2020, 12:37 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும்வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது அத்தியாவசிய, அவசிய காரணங்களின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த கடந்த 25 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 951 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. தடையை மீறியதாக சுமார் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 823 பேரை காவல் துறை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றித்திரிந்த ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதமாக சுமார் ஒரு கோடியே ஆறு லட்சத்து 76 ஆயிரத்து 294 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் பார்க்க: சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அபுதாபி சென்ற தொழில் அதிபர் குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details