தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள விவரக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 ஆயிரத்து 150 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு! - tamilnadu covid-19 case no
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 5) 4 ஆயிரத்து 150 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் ஆயிரத்து 731 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று 60 பேர் உயிரிழந்ததால், அதன் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 510ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2 ஆயிரத்து 186 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
- அரியலூர் - 468
- செங்கல்பட்டு - 6633
- சென்னை - 68,254
- கோவை - 741
- கடலூர் - 1257
- தருமபுரி - 121
- திண்டுக்கல் - 704
- ஈரோடு - 248
- கள்ளக்குறிச்சி - 1205
- காஞ்சிபுரம் - 2547
- கன்னியாகுமரி - 560
- கரூர் - 166
- கிருஷ்ணகிரி - 185
- மதுரை - 4085
- நாகப்பட்டினம் -285
- நாமக்கல் - 109
- நீலகிரி - 124
- பெரம்பலூர் - 168
- புதுக்கோட்டை - 350
- ராமநாதபுரம் - 1385
- ராணிப்பேட்டை - 1148
- சேலம் - 1247
- சிவகங்கை - 512
- தென்காசி - 448
- தஞ்சாவூர் - 496
- தேனி - 1009
- திருப்பத்தூர் - 259
- திருவள்ளூர் - 4806
- திருவண்ணாமலை - 2497
- திருவாரூர் - 539
- தூத்துக்குடி - 1162
- திருநெல்வேலி - 1030
- திருப்பூர் - 204
- திருச்சி - 972
- வேலூர் - 1932
- விழுப்புரம் - 1186
- விருதுநகர் - 895
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 432
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 366
- ரயில் மூலம் வந்தவர்கள்: 416 பேர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:’சோறு இல்லாமல் நாங்க பட்டினி கிடக்கிறோம்’ - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்