சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவ.15) புதிதாக 802 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது எனவும், 918 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 764 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 800 நபர்களுக்கும், அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்த இருவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 கோடியே 18 லட்சத்து 18 ஆயிரத்து 972 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 லட்சத்து 15 ஆயிரத்து 632 நபர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.