தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா - தமிழ்நாட்டில் 3,949 பேருக்கு கரோனா
![தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா coronavirus](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7821112-964-7821112-1593434049429.jpg)
18:03 June 29
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 29) 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 86,224ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 29) மேலும் 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 224ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 62 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரேநாளில் 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று 1,674 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,167பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 969ஆக உயர்ந்துள்ளது.