தமிழ்நாட்டில் இன்று 3,827 கரோனா தொற்று உறுதி - தமிழ்நாட்டில் இன்று 3,827 கரோனா தொற்று உறுதி
17:47 July 06
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 06) 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 06) மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 61 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,571ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரேநாளில் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 571ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று 2,088 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,739 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளது.