தமிழ்நாட்டில் முதல் முறையாக 4 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு - coronavirus in tamilnadu
16:57 July 02
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 02) 4,343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 98,392ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 02) மேலும் 4,343 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 392ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவுக்கு 57 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 1,321ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரேநாளில் 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 021 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று 2,316 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,027பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ளது.
TAGGED:
coronavirus in tamilnadu