தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது. - coronavirus update in tamilnadu
18:00 July 17
தமிழ்நாட்டில் நான்கு ஆயிரத்து 538 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மேலும் நான்கு ஆயிரத்து 538 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907ஆக த்மிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் கரோனாவுக்கு 79 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 315 பேர் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மூன்று ஆயிரத்து 295 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரத்து 1,243 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.