சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 785 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,612 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 152 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 26 லட்சத்து 63 ஆயிரத்து 789 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 150 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,626 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 11 ஆயிரத்து 61 என உயர்ந்துள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் 9 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகளும் என 28 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 578 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,49,827
கோயம்புத்தூர் - 2,42,492
செங்கல்பட்டு - 1,68,768
திருவள்ளூர் - 1,17,789
ஈரோடு - 1,01,906
சேலம் - 98,120
திருப்பூர் - 93,024
திருச்சிராப்பள்ளி - 76,047
மதுரை - 74,599
காஞ்சிபுரம் - 73,951
தஞ்சாவூர் - 73,441
கடலூர் - 63,401
கன்னியாகுமரி - 61,761
தூத்துக்குடி - 55,859
திருவண்ணாமலை - 54,343
நாமக்கல் - 50,622
வேலூர் - 49,396
திருநெல்வேலி - 48,892
விருதுநகர் - 46,044