தமிழ்நாட்டில் புதிதாக 1,585 பேருக்கு கரோனா - தமிழ்நாடு கரோனா எண்ணிக்கை
தமிழ்நாட்டில் புதிதாக 1585 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
கரோனா
By
Published : Aug 24, 2021, 9:06 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 102 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் 26 லட்சத்து 4 ஆயிரத்து 74 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று குணமடைந்த 1,842 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 50 ஆயிரத்து 710 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகளும் என சிகிச்சைப் பலனின்றி 27 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 761 என உயர்ந்துள்ளது.