மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்ரல் 01) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 85 ஆயிரத்து 331 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 813 நபர்களுக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒரு நபருக்கும் என 2817 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 8 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 பேருக்குக் கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 43 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆயிரத்து 634 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 8 லட்சத்து 59 ஆயிரத்து 709ஆக உயர்ந்துள்ளது. அதுபோல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 12ஆயிரத்து 738 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு:
சென்னை - 2,50,000
கோயம்புத்தூர் - 59,247
செங்கல்பட்டு - 56,602
திருவள்ளூர் - 46,223
சேலம் - 33,539
காஞ்சிபுரம் - 30,704
கடலூர் - 25,746
மதுரை - 21,859
வேலூர் - 21,532
திருவண்ணாமலை - 19,706
திருப்பூர் - 19,384
தஞ்சாவூர் - 19,856
தேனி - 17,312
கன்னியாகுமரி - 17,568
விருதுநகர் - 16,885
தூத்துக்குடி - 16,571
ராணிப்பேட்டை - 16,490
திருநெல்வேலி - 16,156
விழுப்புரம் - 15,533
திருச்சிராப்பள்ளி - 15,684