தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 51 ஆயிரத்து 448 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 459 பேருக்கும், தமிழ்நாட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 464 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 27 ஆயிரத்து 120 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 261 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 495 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியும் என மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 387 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை:
சென்னை : 2,32,464
கோயம்புத்தூர் : 54,851
செங்கல்பட்டு : 51840
திருவள்ளூர் : 43,735
சேலம் : 32,511
காஞ்சிபுரம் : 29,328
கடலூர் : 25,011
மதுரை : 21,089
வேலூர் : 20,821
திருவண்ணாமலை : 19,397
தேனி : 17,108
தஞ்சாவூர் : 17,818
திருப்பூர் : 18,049
விருதுநகர் : 16,601
கன்னியாகுமரி : 16,913
தூத்துக்குடி : 16,292
ராணிப்பேட்டை : 16,150