தமிழ்நாட்டில் 14,753 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று மட்டும் 786 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக பரிசோதனை ஆய்வாளர்களுக்கும் அனுமதி பெறப்பட்டு வருகிறது. 41 அரசு, 26 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் புள்ளி விவர அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள 67 ஆய்வகங்களில் 12,653 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 786 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் 694 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 185 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 846 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7,128 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தும் முகாம்களில் 5,349 பேர் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனின்றி நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். இதுவரை 98 பேர் இறந்தனர்.
மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 66 பேர், டெல்லியில் இருந்து வந்த 13 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 6 பேர் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த இருவர், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவருக்கும், ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக பாதிப்பு
- சென்னை -9,364
- செங்கல்பட்டு -695
- திருவள்ளூர் -675
- கடலூர் -421
- அரியலூர் -355
- விழுப்புரம் -322
- திருநெல்வேலி -271
- காஞ்சிபுரம் -249
- மதுரை -224
- திருவண்ணாமலை -173
- கோயம்புத்தூர் -146
- தூத்துக்குடி -144
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -133
- கள்ளக்குறிச்சி -121
- திருப்பூர் -112
- தேனி -101
- விருதுநகர் -95
- ராணிப்பேட்டை -89
- தென்காசி -83
- கரூர் -80
- தஞ்சாவூர் -80
- நாமக்கல் -76
- திருச்சிராப்பள்ளி -72
- ஈரோடு -71
- ராமநாதபுரம் -52
- நாகப்பட்டினம் -51
- சேலம் -49
- கன்னியாகுமரி -49
- வேலூர் -38
- திருவாரூர் -35
- திருப்பத்தூர் -30
- சிவகங்கை -29
- கிருஷ்ணகிரி -22
- புதுக்கோட்டை -18
- நீலகிரி -13
- தருமபுரி -5