தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கை - tamilnadu corona count
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 483 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை பிப்ரவரி.12ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 55, 128 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 478 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்திலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவருக்கும் என 483 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 63 லட்சத்து 41 ஆயிரத்து 762 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 8 லட்சத்து 44 ஆயிரத்து 173 நபர்களுக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4,285 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 486 பேர் குணமாகியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் மூன்று பேரும், அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் என மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 408ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு
சென்னை மாட்டம் 2,33,046
கோயம்புத்தூர் மாவட்டம் 55,063
செங்கல்பட்டு மாவட்டம் 52,003
திருவள்ளூர் மாவட்டம் 43, 834
சேலம் மாவட்டம் 32, 561
காஞ்சிபுரம் மாவட்டம் 29,362
கடலூர் மாவட்டம் 25,045
மதுரை மாவட்டம் 21,118
வேலூர் மாவட்டம் 20, 861
திருவண்ணாமலை மாவட்டம் 19, 416
தேனி மாவட்டம் 17, 122
தஞ்சாவூர் மாவட்டம் 17, 876
திருப்பூர் மாவட்டம் 18, 106
விருதுநகர் மாவட்டம் 16, 612
கன்னியாகுமரி மாவட்டம் 16, 945
தூத்துக்குடி மாவட்டம் 16, 304
ராணிப்பேட்டை மாவட்டம் 16, 172
திருநெல்வேலி மாவட்டம் 15, 656
விழுப்புரம் மாவட்டம் 15, 223
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14, 837
ஈரோடு மாவட்டம் 14,590
புதுக்கோட்டை மாவட்டம் 11,609
கள்ளக்குறிச்சி மாவட்டம் 10, 895
திருவாரூர் மாவட்டம் 11, 265
நாமக்கல் மாவட்டம் 11,723
திண்டுக்கல் மாவட்டம் 11,341
தென்காசி மாவட்டம் 8,480
நாகப்பட்டினம் மாவட்டம் 8,528
நீலகிரி மாவட்டம் 8,271
கிருஷ்ணகிரி மாவட்டம் 8, 102
திருப்பத்தூர் மாவட்டம் 7, 609
சிவகங்கை மாவட்டம் 6,697
ராமநாதபுரம் மாவட்டம் 6,429
தருமபுரி மாவட்டம் 6, 621
கரூர் மாவட்டம் 5, 451
அரியலூர் மாவட்டம் 4, 709
பெரம்பலூர் மாவட்டம் 2, 277
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 946
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,040
ரயில் மூலம் வந்தவர்கள் 428