தமிழ்நாட்டில் இன்று மேலும் 2 ஆயிரத்து 865 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 67 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468ஆக அதிகரித்துள்ளது.
corona
இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 814ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 763ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனாவால் 33 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 866ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:மதுரை மாநகரில் 1000 ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு