சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு தங்களது சமூக வலைத்தளம் மூலமாக அரசியல் தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், டிவிட்டர் மூலமாக பல்வேறு பரப்புரை சிறுபான்மை பிரிவு சார்பில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் டிவிட்டர் பக்கம் திடீரென நேற்று (பிப் 8) ஹேக் செய்யப்பட்டு, wow store என்ற அரபு மொழி பக்கமாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லாம் பாஷா நேற்று ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.