உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சிகள் பிற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
ஸ்டாலினுடன் இதைத்தான் பேசினேன் இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிர காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக பேசினோம். மோடி அரசு இந்திய மக்களை மத, இன ரீதியாக பிரிப்பதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி எப்படி வெற்றி பெறுவது, எந்தெந்த மாவட்டங்களில் என்ன பிரச்னைகள் உள்ளன அவற்றை எவ்வாறு சரி செய்யலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினோம். 6,000 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பற்றி பேச முடியாது, மேயர் தொடர்பான தேர்தல் வராததால் அதுபற்றி பேச ஒன்றுமில்லை" என்றார்.
இதையும் படிங்க: 'உண்மையைப் பேச வேண்டும் என்பதற்காக திமுகவிலிருந்து விலகினேன்' - பழ. கருப்பையா பிரத்யேகப் பேட்டி!