திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் மகன் சுஜித் வில்சன் (2) ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திரை பிரபலங்கள் சுஜித்தின் பெற்றோர் சந்தித்து ஆறுதல் கூறியும் நிதி உதவி வழங்கியும் வந்தனர்.
சுஜித்தின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் - காங்கிரஸ் அறிவிப்பு! - சுஜித்தின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் - காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி நிவாரணமாக வழங்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Report of Congress
அந்த வகையில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் எத்தகைய சூழ்நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? - சுஜித்துக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் கேள்வி!