சென்னை:காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகள் குழு, தமிழ்நாடு நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியை இன்று (ஜூலை 16) நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதியளிக்குமாறு கேட்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 18-ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.