தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்க வேண்டும்’ - கேரள அரசுக்கு ஸ்டாலின் கடிதம் - கேரள அரசுக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள அரசுக்கு கடிதம் அனுப்பிய  ஸ்டாலின்
கேரள அரசுக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின்

By

Published : Jun 19, 2022, 10:10 PM IST

Updated : Jun 19, 2022, 10:34 PM IST

சென்னை:சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இதனை மீண்டும் வலியுறுத்தியும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் கேரள முதலமைச்சர், இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இன்று மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:44ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

Last Updated : Jun 19, 2022, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details