தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கேள்வி கேட்டிருந்தால் நேரலை செய்யப்பட்டிருக்கும்' - ஈபிஎஸ்ஸை கிண்டல் செய்த அப்பாவு!

எதிர்க்கட்சி தலைவர் கேள்வி நேரத்தில் கேள்வி கேட்டிருந்தால் நேரலை செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக பதிலளித்தார்.

ஈபிஎஸ்ஸை கிண்டல் செய்த அப்பாவு!
ஈபிஎஸ்ஸை கிண்டல் செய்த அப்பாவு!

By

Published : May 9, 2022, 7:14 PM IST

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்இன்று (மே 9) நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்த நிலையில், ஆளும் கட்சியினர் பேசுவதை மட்டுமே நேரலை செய்யப்படுகிறது எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை" எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக வெளியிடுவதும், பாதியாக வெளியிடுவதும் அந்தந்த செய்தி நிறுவனத்தின் விருப்பம். பேரவை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோக்களாக அந்தந்த செய்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.கேள்வி நேரம் மட்டும் முழுமையாக நேரலை செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்டிருந்தால் நேரலை செய்யப்பட்டிருக்கும் எனக் கூறிய அவர், படிப்படியாக பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்; சவால்விட்ட திமுக எம்.பி' - 'முடிந்தால் தூக்குங்கள்'; பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

ABOUT THE AUTHOR

...view details