திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார்.
ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!
சென்னை: ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!
இச்சந்திப்பின்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.