சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா .வளர்மதியின் மகன் சி.பா. மூவேந்தன் எழுதிய “ மக்களால் நான் ” புத்தகத்தை வெளியிட்டார்.
‘மக்களால் நான்’ புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் - cm book release
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா .வளர்மதியின் மகன் சி.பா. மூவேந்தன் எழுதிய “ மக்களால் நான் ” புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ் ஆட்சிமொழி , தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் / உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கோ . விசயராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சி.பா. மூவேந்தன் தனது ஆய்வு நூலை வழங்கி வாழ்த்து பெற்றார்.
TAGGED:
cm book release