தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சரின் பொங்கல் வாழ்த்து! - tn cm pongal wishes

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

By

Published : Jan 14, 2020, 12:40 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், பொங்கல் வாழ்த்துகளை முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக்கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும்போது, பொங்கலோ, பொங்கல் என்று மகிழ்ச்சியாக ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

உலகின் உன்னதமான தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு சிறக்க, தண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைத் திட்டம், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப் பணியினை மேற்கொள்ளப்பட்டு கூட்டுப்பண்ணைய திட்டம், அதிகரித்து வரும் பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை கருத்தில்கொண்டு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்திவருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த இனிய நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு 21ஆம் தேதி வரை கிடைக்கும் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details