தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

சென்னை: மெரினா கடற்கரையில் குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச, முதலமைச்சர் பழனிசாமி பேட்டிங் செய்தார்.

By

Published : Jan 4, 2020, 1:19 PM IST

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சர்
கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சர்

தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி தொடக்க விழா சென்னை மாநில கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிது தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மீன்வளத் துறை மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலர் சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர் தீரஜ் குமார், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சர்

பின்னர், மேடையில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது;

”விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்தையும் கட்டுக்கோப்பான உடலையும் வளர்த்துக்கொள்ள உதவும். உயர் அலுவலர்களுக்கு பல்வேறு பணி சுமைகள் உள்ளன. அவர்கள் விளையாடும்போது மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சி கூடும். விளையாடுவதற்கு வயது தேவையில்லை, எந்த வயதிலும் விளையாடலாம். நேர்த்தியான வாழ்க்கை வாழ விளையாட்டு அவசியம்” இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விளையாட்டு குழுவினருக்கு தனித்தனியாக வாழ்த்தையும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார், டிஜிபி திரிபாதி பந்து வீச முதலமைச்சர் பேட்டிங் செய்தார்.

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அலுவலர்கள் குழுவிற்கு இடையே நடக்கும் இந்த முதல் போட்டியை முதலமைச்சர் டாஸ் போட்டு தொடங்கிவைத்தார். முதலில் டாஸ் வென்ற ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் குழு பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடினர். ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆறு குழுவினர் விளையாடும் போட்டியானது வார விடுமுறை நாட்களில் ஒரு மாத காலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருநங்கை செவிலியருக்கான பணி ஆணையை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details