ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பின் திருவுருவமாம் கருணையின் வடிவமாம் இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
’இயேசு போதித்த அன்பு வழியில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்’ - முதலமைச்சர் ஈஸ்டர் வாழ்த்து - தமிழ்நாடு முதலமைச்சரின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி
இயேசு போதித்த அன்பு, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தனது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பகைவரிடத்தும் அன்பு காட்டும் எல்லையில்லா இரக்கக் குணத்தைக் கொண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது புனித நூலான பைபிளின் வாசகங்களை மனதில் நிறுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுவார்கள்.
இந்த நன்னாளில், உலகில் அன்பும் அமைதியும் நிறைந்திட இயேசு போதித்த தியாகம், அன்பு, சமாதானம், சகோதரத்துவம் போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.