தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமைச் சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை: முதலமைச்சர் பழனிசாமி - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: குடியுரிமைச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பொய்யாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tamilnadu-cm-palanisamy-about-caa
tamilnadu-cm-palanisamy-about-caa

By

Published : Dec 22, 2019, 10:36 PM IST

Updated : Dec 22, 2019, 11:12 PM IST

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வதந்திகள்பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம். எனவே பொதுமக்கள் தவறான பரப்புரைகளுக்கு செவி சாய்க்காமல், அமைதி காக்கவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது மத்திய அரசு'

Last Updated : Dec 22, 2019, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details