தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி! - speaker pandian died at chennai

சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tamilnadu cm edappadi
Tamilnadu cm edappadi

By

Published : Jan 4, 2020, 3:06 PM IST

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச் பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி பி.ஹெச் பாண்டியன் உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பி.ஹெச் பாண்டியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அமைச்சர் மாபா பாண்டியராஜன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், பி.ஹெச் பாண்டியன் தொடர்பான நினைவுகளை பகிர்ந்தார்.

இதையும் படிங்க: அதிமுகவிற்கு மக்கள் தந்த பதில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details