தமிழ்நாட்டில் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் கோரிக்கைகளில் ஒன்றான ஓபிசி இட ஒதுக்கீட்டில் இன்று(ஜூலை 27) உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்" இவ்வாறு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "சமூக நீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இயற்கைக்கு பாதகமாக வரும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடு வரைவு 2020ஐ கைவிடுக: விஜயகாந்த்