இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும் மற்றொரு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், லாரியில் பயணித்த 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
'உ.பி. விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்' - எடப்பாடி பழனிசாமி - UP roda accident latest news
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 24 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

tamilnadu-cm-edappadi-palanisamy
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி