சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மும்பையில் காலமானார். அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்
அந்த இரங்கல் செய்தியில், ”இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். எட்டு தசாப்தங்களாக நீண்ட அவரது வாழ்க்கையில் பல்வேறு மொழிகளில் தனது இனிமையான் குரலினால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கானக் குயில் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
TAGGED:
AMMK leader