இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று (நவ.14) நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் - cm palanisamy childrens day wish
சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அனைத்துக் குழந்தை செல்வங்களுக்கும், அவர்களை நாட்டின் வருங்கால தூண்களாக செம்மைப்படுத்தும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி!