சென்னை:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க, பணம் பட்டுவாடாவைத் தடுக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பறக்கும் படைகள் சென்னையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கப்பணம் எடுத்துச் செல்லக் கூடாது, அதேபோல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.