மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அதில் கல்வித்தகுதியில், சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ் அதில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் இச்சூழலில் தனது கோரிக்கையை ஏற்று பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழையும் இணைத்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.