தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு! - Tamilnadu-Chief-Minister-Palanisamy-mourns

சென்னை: காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

By

Published : Sep 4, 2020, 6:18 PM IST

Updated : Sep 4, 2020, 7:09 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (செப்.4) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதி, பெருமாள் என்பவரின் மனைவி மலர்கொடி, நம்பியார் என்பவரின் மனைவி லதா, மாதவன் என்பவரின் மனைவி ராசாத்தி, உத்திராபதி என்பவரின் மனைவி சித்ரா, ராஜேந்திரன் என்பவரின் மனைவி ருக்மணி, ரங்கநாதன் என்பவரின் மனைவி ரத்தினம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில் துறை அமைச்சர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினைக் கருத்தில்கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடலூர் அருகே வெடி விபத்து: 9 பேர் பலி

Last Updated : Sep 4, 2020, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details