தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. ஆவடி சிறுமியின் பெற்றோர் உருக்கம்

முகச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆவடி சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி என சிறுமியின் பெற்றோர் உருக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆவடி சிறுமியின் அறுவை சிகிச்சை.. தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. சிறுமியின் பெற்றோர் உருக்கம்
ஆவடி சிறுமியின் அறுவை சிகிச்சை.. தமிழ்நாடு முதலமைச்சர்தான் எங்கள் குலசாமி.. சிறுமியின் பெற்றோர் உருக்கம்

By

Published : Aug 25, 2022, 9:53 AM IST

சென்னை திருப்பெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த ஆவடியைச் சேர்ந்த சிறுமிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி, தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் பேட்டி

எனவே சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி வசித்து வரும் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மருத்துவமனைக்கு சென்று, சிறுமியின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் அளித்தார். மருத்துவர்களிடம் சிறுமி குறித்து கேட்டறிந்த சுதர்சனம் எம்எல்ஏ, தன்னுடைய தொகுதியின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நிதி உதவி அளித்த சட்டமன்ற உறுப்பினருக்கும், தன்னுடைய குழந்தையை காப்பாற்றிய முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சரை சந்திக்க சிறுமியும் தாங்களும் ஆர்வமுடன் உள்ளதாகவும், அவர் தான் தங்கள் குடும்பத்தின் குலசாமி என்றும் சிறுமியின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இதையும் படிங்க:சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை வெற்றி... சிறுமியை விரைவில் சந்திக்கும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details