தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்- ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி!

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கில் உயிரிழந்த ஜெயராஜின் மகளுக்கு அரசு பணிநியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Persi
Persi

By

Published : Jul 27, 2020, 6:42 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ அலுவலர்கள் விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு, தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று (ஜூலை27) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்யிடம் அரசுப் பணிக்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெர்ஸிஸ், "தந்தை, மற்றும் சகோதரன் இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த வேதனையைப் போக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த பணி நியமன ஆணைக்குத் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

மேலும், வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரியத் தமிழ்நாடு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொலை சம்பவத்திற்குத் துரித விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தர வேண்டும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details