கரோனா தீநுண்மி பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமலுக்குவந்து 46 நாள்கள் ஆன நிலையில் தமிழ்நாடு காவல் துறை இதுவரை தடையை மீறியதாக நான்கு லட்சத்து 42 ஆயிரத்து 621 பேரை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது.
மேலும், மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 390 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக நான்கு கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 479 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!