தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெற உள்ளது.

Tamilnadu Cabinet meeting day after tomorrow
நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா ?

By

Published : Feb 18, 2020, 7:59 AM IST

நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்- முக்கிய அறிவிப்பு வெளியாகுமா ?

டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முன்னதாக, முதலமைச்சர் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.

இது தவிர குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க : மத்திய அரசின் புள்ளி விவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செங்கோட்டையன்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details