2019 மக்களவை தேர்தலையடுத்து தேசிய, மாநில அளவில் அரசியல் கட்சிகள், தங்களது கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி தொடங்கி, திமுக, அதிமுக, அமமுக என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன.
பாஜக தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி - பதவிக்கான தேர்தல்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக் காலம் நிறைவடைய இருப்பதையொட்டி அந்த பதவியை பிடிக்க அக்கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
kamalalayam
இந்த பட்டியலில், அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவரின் பதவிக் காலம் நிறைவடைய இருப்பதால், அந்த பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தலைவர் பதவியை பிடிக்க அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது வரை மாநில தலைவருக்கான போட்டியில் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.