சென்னை: தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று காலை செய்திக் குறிப்பு ஒன்றினைப் பார்த்து, அதில் தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்க நிர்வாகிகள் சில கோரிக்கைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அச்சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக அழைத்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இச்சந்திப்பின்போது சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. பொதுமக்களுக்குக் கரோனா காலத்தில் முதற்கட்டமாக 2,000 ரூபாயும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜுன் 3ஆம் தேதி 2,000 ரூபாயும், மளிகைப் பொருட்களும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்தனர்.
மேலும், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அமைச்சர், கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
இச்சந்திப்பின்போது சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்தனர்.

தமிழ்நாடு
இதையும் படிங்க:மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினி