உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், 'கல்லூரி கல்வித்துறையில் இணை இயக்குநர் திட்டம், மேம்பாடு பணிபுரிந்த ஜோதி வெங்கடேஸ்வரன் தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா கோயம்புத்தூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணிபுரிந்த பொன்.முத்துராமலிங்கம் மதுரை மண்டல இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மண்டல இணை இயக்குநராக லதா பூரணம் நியமிக்கப்படுகிறார். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் கல்லூரியின் முதல்வர் ராமலட்சுமி கல்லூரிக் கல்வித் துறையின் திட்டம், மேம்பாடு இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.திருச்சி மண்டல கல்வி கல்லூரி இணை இயக்குநராக மேகலா நியமிக்கப்படுகிறார். கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நிதிப் பணியில் தீபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் முதல்வர்களுக்கு இணை இயக்குநர் நிலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.விழுப்புரம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரமா கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.சென்னை ராணிமேரி கல்லூரியின் முதல்வராக உமா மகேஸ்வரி நியமனம் செய்யப்படுகிறார். சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் நிலை இரண்டில், பணிபுரிந்த 23 பேருக்கு இணை இயக்குநர் நிலை 1 பதவி உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.