தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு இன்று நடந்த சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By

Published : May 10, 2022, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி கூடியது. மொத்தம் 22 நாட்கள் அரசு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மானியக் கோரிக்கைகாகக் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் மொத்தம் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் இறுதி நாளான இன்று(மே 10) உள்துறை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை வழங்கிப் பேசினார். பின்னர் பேசிய சபாநயகர் அப்பாவு, “சட்டப்பேரவை நாகரிகமாக நடக்க முதல் காரணம் முதலமைச்சர் என்றாலும் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு கொடுத்ததால் பேரவை நாகரிகமாக நடந்து உள்ளது. எதிர்க்கட்சிகளையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். மானியக் கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவை ஒருநாள் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு வெளியேற்ற உத்தரவிட்டேன்.

அன்றும் முதலமைச்சர் சபையில் இருந்திருந்தால் அந்த சூழல் ஏற்பட்டிருக்காது. கனத்த இதயத்தோடு தான் எதிர்க்கட்சியான அதிமுகவை ஒருநாள் வெளியேற்ற உத்தரவிட்டேன்” என்று சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து மானியக்கோரிக்கைக்காக கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.

இதையும் படிங்க: ராஜ்யசபா இடங்களை திமுகவிடம் கேட்போம்-சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details