தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும், வாக்களிக்க செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் கடந்த 1ஆம் தேதி முதல் வாக்கு செலுத்துவதற்காக பொதுமக்கள் வெளியூர் செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை முதல் இரவு 8 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 1850 பேருந்துகளும், 650 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.