இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
11:37 May 19
சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
- தமிழ்- 15/06/2020
- ஆங்கிலம்- 17/06/2020
- கணிதம்- 19/06/2020
- பிற மொழிப் பாடம்- 20/06/2020
- அறிவியல்- 22/06/2020
- சமூக அறிவியல்- 24/06/2020
- தொழிற்கல்வி- 25/06/2020
அதையடுத்து 26/03/2020 நடைபெறவிருந்த 11ஆம் வகுப்பு வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வுகள் 16/06/2020 அன்று நடைபெறும். 24/03/2020 நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பு வேதியியல், கணக்கியல், புவியியல் பொதுத் தேர்வுகள் 18/06/2020 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!