தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாதிக் கலவரத்தை தூண்டுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவர்' - chennai air[port

சென்னை: பொன்பரப்பி விவகாரம் குறித்து பேசிய தமிழிசை, சாதிக் கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை

By

Published : Apr 21, 2019, 11:00 PM IST

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'தேர்தல் பரப்புரை செய்ய திருவனந்தபுரத்திற்கு செல்கிறேன். கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜகவிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி. பொன்னமராவதி, பொன்பரப்பி சம்பவம் மனதளவில் சிறு பதற்றத்தையும் வலியையும் தருகிறது. சமூக நல்லிணக்கம், சாதிய வேற்றுமை இல்லாத ஒரு சமுதாயம் உருவாக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்போது இது போன்ற சாதிக் கலவரங்களை தூண்ட நினைப்பது தவறு.

பாஜக மாநில தலைவர் தமிழிசை

சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். பொன்பரப்பி விவகாரம் குறித்து பாஜக சார்பில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய குறிப்பிட்டுள்ளோம்.

மேலும், மதுரையில் சீல் வைக்கப்பட்ட அறைக்குள் பெண் அலுவலர் சென்றது தவறு. இந்தச் செயல் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தும். யார் குற்றத்திற்கு காரணம் என்று தெரியாமல் ஒரு தரப்பினர் மீது குற்றம் சுமத்துவது தவறு.

அரசியல் ஆதாயத்திற்காக எதிர் அணியை குற்றம் சுமத்துவது தவறு. இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது துரதிருஷ்டவசமான ஒன்று, எந்த நாடாக இருந்தாலும் கலவரம் என்பது கூடாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்' என அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details