தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோமாலியாவுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தவேண்டும் - வைகோ

சென்னை: சோமாலியாவுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தவேண்டும் என, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

tamilisai airport press meet வைகோ vaiko

By

Published : Aug 4, 2019, 2:12 AM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பல நல்ல மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளன. முக்கியமாக புதிய மருத்துவக் கொள்கை கிராமப்புற மக்களுக்கு உடனடியாக மருத்துவசேவை கிடைக்க வேண்டும், போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழிசை பேட்டி


மேலும் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அழிவு திட்டங்கள் என்றும் தமிழகம் சோமாலியா போல் மாறப்போகிறது என்று எதிர்மறை கருத்துகளை வைகோ கூறி வருகிறார். பயிர் காப்பீட்டுத்திட்டத்திலும் பெண் குழந்தை பாதுகாப்பிற்கான செல்வ மகள் திட்டத்திலும் அதிகமாக பயனடைந்தவர்கள் தமிழக மக்கள். இதெல்லாம் வைகோவுக்கு தெரியாது. நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் தான் வைகோ கண்ணுக்கு தெரியும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details