தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் - தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல்

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

By

Published : Jul 1, 2020, 8:46 PM IST

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையத்தின் 5ஆவது யூனிட்டில் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று, இன்று (ஜூலை 1) காலை திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அனல்மின் நிலையத்தில் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை பொது மேலாளர் கோதண்டம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன். என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details